சேலம்-சென்னை பசுமை சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு அதிகபட்சமாக இழப்பீடு வழங்கப்படும்
சேலம்-சென்னை பசுமை சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.9.4 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று சேலத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறினார்.
சேலம்,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 4 நாட்களாக அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல்லை நட்டனர்.
இந்த நிலையில், சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்காக நிலம் வழங்கிய ஆச்சாங்குட்டப்பட்டி அருகே அரமனூர் கிராமத்தை சேர்ந்த ஷோபனா, பூங்கொடி, மணிமேகலை ஆகிய 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ரோகிணி வழங்கினார். அப்போது, அதே இடத்தில் தமிழக அரசின் சார்பில் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் பயனாளிகளிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பல்வேறு உதவிகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிலத்தில் இருக்கும் மரங்கள், வீடுகள், மாட்டு கொட்டகைகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இருந்தால் அதற்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் பசுமை சாலை 36.3 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. இதற்காக 20 கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிலங்கள் 186 ஹெக்டரும், புறம்போக்கு நிலங்கள் 46 ஹெக்டரும், வனப்பகுதி 16 ஹெக்டரும் என மொத்தம் 248 ஹெக்டர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை 11 கிராமங்களில் 853 பட்டாதாரர்களின் 126 ஹெக்டர் நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 18 கிலோ மீட்டர் ஆகும். இந்த பணியின்போது 845 பட்டாதாரர்களில் 90 சதவீதம் பேர் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் மட்டுமே அதிக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு அதிக இழப்பீடு தொகை கொடுத்தால் நிலம் கொடுக்க தயார் என அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்துக்கு நிலம் கொடுக்கும் உரிமையாளருக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் குறைந்த பட்சம் 2 மடங்கும், கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 2½ மடங்கில் இருந்து 4 மடங்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கையகப்படுத்தும் நிலங்களில் தென்னை மரங்கள் இருந்தால், ஒரு மரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும். மாமரத்துக்கு ரூ.30 ஆயிரம், கொய்யா மரத்துக்கு ரூ.4 ஆயிரத்து 200, நெல்லி மரத்துக்கு ரூ.4 ஆயிரம், பலா மரத்துக்கு ரூ.9 ஆயிரத்து 600, புளியமரத்துக்கு ரூ.9 ஆயிரத்து 375, பாக்கு மரத்துக்கு ரூ.8 ஆயிரம் 477, பனை மரத்துக்கு ரூ.5 ஆயிரமும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலம் வழங்க உள்ள பட்டாதாரர்களுக்கு அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. படித்த பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க தேவையான பயிற்சி அளித்து நீட்ஸ் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பசுமை சாலைக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ஹெக்டருக்கு ரூ.21.52 லட்சமும், அதிகபட்சமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.9.4 கோடியும் இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரு சிலர் மட்டுமே விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

Related Tags :
Next Story