நீதிபதிகள் யாருக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் குடும்பநல நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களின் தொடக்கவிழா நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு அந்த நீதிமன்றங்களின் பெயர் பலகைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தம்பதியினருக்குள் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளுக்கு சுமுகத்தீர்வு காண குடும்பநல நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இப்போது விவாகரத்தும், மணமுறிவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க தம்பதிகள் தங்களது பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும்.
கோபமான மனநிலையில் இருக்கும்போது எந்த ஒரு முடிவையும் எடுக்க முன்வரக்கூடாது. குடும்பநல நீதி மன்றங்கள், வழக்குகள் மீது விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். தீர்ப்பு மூலம்தான் பராமரிப்பு தொகையை பெறமுடியும். காலதாமதம் என்பது ஏழை பெண்கள், குழந்தைகளுக்கு வாழ்வாதாரத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
வக்கீல்கள் தனது மனுதாரருக்கு வாதாடுபவர்களாக மட்டும் இல்லாமல் ஆலோசகர்களாகவும், திருமண உறவை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டும். வழக்கு தாக்கல் செய்யும் மனுதாரர்களைச் சார்ந்தே நீதிபதிகளும், வக்கீல்களும் இயங்க வேண்டி உள்ளது. எனவே உயர் நீதிமன்றம் என்றாலும் சரி, மாவட்ட நீதிமன்றம் என்றாலும் சரி, மனுதாரர்களிடம் கனிவுடன் செயல்பட வேண்டும். சேவை மனப்பான்மையுடன் பணியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வழக்குகளை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும்.
காலம் கடத்தினால், அடுத்தமுறை மக்கள் நம்மிடம் வரமாட்டார்கள். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்பதை உணர்ந்து வழக்குகளை விரைந்து முடித்தால் மட்டுமே மனுதாரர்களின் நம்பிக்கையை பெற முடியும். நீதி வழங்கப்படுவதற்கு நீதிபதிகள் மட்டும் காரணமாக இருப்பதில்லை. வக்கீல்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே மிகச்சிறந்த தீர்ப்புகள் வெளிவர வக்கீல்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாகவோ, சாதகமாகவோ செயல்படக்கூடாது. தீர்ப்புகள்தான் நீதிபதிகளை எடைபோடும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்க்கும்போது நீதி வழங்கப்பட்டு உள்ளது என்பது முழுமையாக தெரியவேண்டும். தீர்ப்புகள் தரத்துடனும், நுட்பமானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய பிறகு நீதிபதிகளால் பேசமுடியாது. அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் பேசப்பட வேண்டும்.
நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. ஆனால் தீர்ப்புகள், நீதிபதிகள் மீதான விமர்சனங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். தீர்ப்பு குறித்த விமர்சனங்களுக்கு சில காட்சி ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதற்கு காரணம், அவர்களுடைய வியாபார எண்ணமாகத்தான் இருக்க முடியும். ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்கவேண்டும். இந்த விமர்சனங்களை கண்டு உணர்ச்சி வசப்படாமல் நீதிமன்றத்தின் மாண்புகளை பாதுகாக்கும் வகையில் சட்டத்தின் படியும், மனசாட்சிப்படியும் தீர்ப்பளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 3-வது நீதிபதிக்கு அனுப்பப்படுவதிலிருந்தே, நீதிமன்றம் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று தமிழகம் வருவதற்கு முன்பு, ஒரு ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகம் வந்துள்ளேன். தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியவை என்னை ஈர்த்துள்ளது. கடந்த ஓராண்டு கால பணி எனக்கு மகிழ்ச்சியானதாகவே இருக்கிறது. தொடர்ந்து இங்கேயே பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story