ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய பெண் போலீஸ் அர்ச்சனா கெம்பேகவுடா விருதுக்கு தேர்வு மேயர் சம்பத்ராஜ் பாராட்டினார்
ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய பெண் போலீஸ் அர்ச்சனா கெம்பேகவுடா விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் ரூ.10 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.
பெங்களூரு,
ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய பெண் போலீஸ் அர்ச்சனா கெம்பேகவுடா விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் ரூ.10 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.
தாய்ப்பால் புகட்டிய பெண் போலீஸ்பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி, தொட்ட தொகூரு அருகே செலிபிரிட்டி லே–அவுட்டில் உள்ள சாலையோரம் கடந்த 1–ந் தேதி பச்சிளம் ஆண் குழந்தை ஆதரவற்று கிடந்தது. அந்த குழந்தைக்கு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் அர்ச்சனா தாய்ப்பால் புகட்டி காப்பாற்றினார். ஆனால் தலையில் காயம் அடைந்திருந்த அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டது. இதை கேட்டு அர்ச்சனா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
அதே நேரத்தில் ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய பெண் போலீஸ் அர்ச்சனாவை முதல்–மந்திரி குமாரசாமி, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் அர்ச்சனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
கெம்பேகவுடா விருதுக்கு தேர்வுஇந்த நிலையில், ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய பெண் போலீஸ் அர்ச்சனாவை நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து மேயர் சம்பத்ராஜ் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து மேயர் கவுரவப்படுத்தினார். அத்துடன் ஒரு பதக்கம், சேலை மற்றும் ரூ.10 ஆயிரத்தை அர்ச்சனாவுக்கு மேயர் சம்பத்ராஜ் பரிசாக வழங்கினார்.
பின்னர் மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–
சாலையில் ஆதரவற்று கிடந்த குழந்தையை தனது குழந்தை போல் பாவித்து பெண் போலீஸ் அர்ச்சனா தாய்ப்பால் புகட்டி காப்பாற்றினார். துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. அர்ச்சனாவுக்கு பாராட்டு தெரிவிக்க நினைத்தேன். அதனால் அவரை அழைத்து கவுரவப்படுத்தினேன். ஆண்டுதோறும் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் கெம்பேகவுடா விருதுக்கு அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அரண்மனை மைதானத்தில் நடைபெறும் விழாவில் கெம்பேகவுடா விருதை அர்ச்சனாவுக்கு முதல்–மந்திரி குமாரசாமி வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.