ஸ்ரீரங்கத்தில் பூ வியாபாரியிடம் கத்திமுனையில் பணம் பறித்த ரவுடி மதுரையில் கைது
ஸ்ரீரங்கத்தில் பூ வியாபாரியிடம் கத்திமுனையில் பணம் பறித்த வழக்கில் ஒரு ரவுடியை மதுரையில் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் கீழவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 37). பூ வியாபாரி. கடந்த 21-ந் தேதி காலை கதிர்வேலிடம் கீழவாசல் பகவதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சந்திரமோகன்(37) மற்றும் அவருடைய கூட்டாளிகள் தையல்நாயகி தெருவை சேர்ந்த மகேஷ் என்கிற மகேஷ்வரன்(26), நெம்பர்1 டோல்கேட் பகுதியை சேர்ந்த சபரி என்கிற சங்கர்(26) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்து கூட்டம் சேரவே 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் அன்று இரவு மீண்டும் கதிர்வேல் வீட்டிற்கு சென்ற ரவுடிகள் 3 பேரும் கதிர்வேல் குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் வைத்திருந்த ரூ.55 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதேபோல் கடந்த 22-ந் தேதி கீழ உத்திரை வீதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்த காமராஜ்(45) என்பவரிடம், சந்திரமோகன் உள்ளிட்ட 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பணம் இல்லாததால் ஓட்டலை அடித்து நொறுக்கிவிட்டு காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக கதிர்வேல், காமராஜ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து ரவுடிகள் 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மதுரையில் பதுங்கி இருந்த சந்திரமோகனை இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். சந்திரமோகன் கொடுத்த தகவலின் பேரில் மகேஷ்வரன், சபரியை போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த 2 பேரும் திருச்சியில் இருந்து விராலிமலை வழியாக காரில் மதுரை சென்றனர். அவர்களை பிடிக்க போலீசார் பின் தொடர்ந்தனர்.
இதை அறிந்த இருவரும் காரில் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்றனர். நமணசமுத்திரம் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டபோது காரை நிறுத்தாமல் சென்ற ரவுடிகளை போலீசார் துரத்தினர். இதையறிந்த மகேஷ்வரன், சபரி ஆகியோர் காரை புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் நிறுத்திவிட்டு அருகில் இருந்த தைலமரக்காட்டிற்குள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் மகேஸ்வரன், சபரியை தைல மரக்காட்டிற்குள் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story