கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ள தூத்துக்குடி விமான நிலையம்


கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ள தூத்துக்குடி விமான நிலையம்
x
தினத்தந்தி 25 Jun 2018 2:45 AM IST (Updated: 25 Jun 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) முதல் மேலும் ஒரு தனியார் நிறுவனம் விமான சேவையை தொடங்க உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) முதல் மேலும் ஒரு தனியார் நிறுவனம் விமான சேவையை தொடங்க உள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன்படி விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட அனைத்து பகுதியும் குளிரூட்டப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் பூம்புகார் நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் செலவில் பல்வேறு கண்கவர் ஓவியங்கள் விமான நிலையம் முழுவதும் வைக்கப்பட்டு உள்ளன. அந்த ஓவியங்களை பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். அதேபோன்று விமான நிலையத்தின் முன்பகுதியிலும் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளன. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.


Next Story