நெல் கொள்முதலில் ரூ.2¾ கோடி மோசடி கணவன்- மனைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
நெல் கொள்முதலில் ரூ.2¾ கோடி மோசடி செய்த கணவன்- மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா நச்சலூரை சேர்ந்தவர் ராஜா(வயது 55). இவர் விவசாயிகளிடம் நெல்மூட்டைகளை பெற்று கொண்டு அதனை விற்பனை செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் உள்பட எனது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து குளித்தலை பகுதியிலுள்ள விவசாயிகளிடம் கடந்த சில மாதங்களுக்கு நெல்கொள்முதலில் ஈடுபட்டோம். பின்னர் அந்த நெல் மூட்டைகளை, சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வேப்பநத்தம் பகுதியில் பி.ஆர்.சி. டிரேடர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் சின்னக்கண்ணு, அவரது மனைவி கவுசல்யா ஆகியோரிடம் ரூ.3 கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்தோம். 15 நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய அவர்கள், ரூ.76 லட்சத்து 54 ஆயிரத்து 926-ஐ கொடுத்து விட்டனர்.
வழக்குப்பதிவு
ஆனால் மீதிப்பணம் சுமார் ரூ.2¾ கோடியை திருப்பித்தர மறுத்து மோசடி செய்து விட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இது குறித்து குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி, மோசடியில் ஈடுபட்டதாக சின்னகண்ணு, கவுசல்யா மற்றும் அவர்களது கார் டிரைவர் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Tags :
Next Story