30 ஆண்டுகளுக்கு பிறகு வடுவூர் ஏரி தூர்வாரும் பணி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
30 ஆண்டுகளுக்கு பிறகு வடுவூர் ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார்.
வடுவூர்,
திருவாரூர் மாவட்டம், வடுவூர் ஊராட்சியில் உள்ள வடுவூர் ஏரியில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பணியினை தொடங்கி வைத்தார். வடுவூர் ஏரி கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தூர்வாரப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு முக்கிய ஆறுகள் மற்றும் கிளை ஆறுகள் ரூ.1,560 கோடி மதிப்பீட்டில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் தூர்வாரப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக ரூ.900 கோடி மதிப்பீட்டில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் முக்கிய ஆறுகள் மற்றும் கிளை ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக தமிழக அரசால் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு தூர்வாரும் பணிகள், கட்டுமானம் மற்றும் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.10 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வடுவூர் ஏரி இந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் பெருக்குகின்ற ஏரியாகவும் விளங்குகின்றது. இந்த ஏரி முழுவதும் வண்டல் மண் படிந்து தூர்ந்துபோய் உள்ளதால் இந்த ஏரியை தூர்வாரிட விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக ஏரியை தூர்வார உத்தவிட்டுள்ளார். ஏரியில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாய நிலங்களை மேம்படுத்தி கொள்ளவும், சொந்த பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தோராயமாக 1 மீட்டர் ஆழத்திற்கு சுமார் 4 லட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுக்கப்பட உள்ளது.
இதனை விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கும், சொந்த பயன்பாட்டிற்க்கும் பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள வேண்டும். இதன் மூலம் 1,356 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதைபோல மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரவாக்கோட்டை மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலங்குடி பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் அரசாணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பணிகளும் ஒரு சில வாரங்களில் தொடங்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வன அலுவலர் அறிவொளி, மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அசோகன், தாசில்தார் மலைமகள், முன்னாள் ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் (வெண்ணாறு) இளங்கோ, முன்னாள் நிலவள வங்கி தலைவர் செந்தில்ராஜ், அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அமைப்பினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story