வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக கருதப்பட்ட 15 பேர் மீட்பு
வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக கருதப்பட்ட 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வேலூர்,
தமிழகத்திற்குள் வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதை பார்த்த பலர் உண்மை என்று கருதி சந்தேகப்படும் படியாக திரிந்த நபர்களை தாக்கினர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா அத்திமூர் என்ற இடத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற 5 பேரை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ஒருவர் கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்திலும் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல தாக்குதல் சம்பவங்கள் நடந்தது.
இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தை கடத்துபவர் என சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ‘வாட்ஸ்அப்’ எண் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு அடைந்த பலர் தங்கள் பகுதியில் சந்தேகப்படும் படியாக திரிபவர்கள் குறித்து புகார் அளிக்க தொடங்கினர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்தும், பொதுமக்களால் தாக்கப்படும்போது அதை தடுத்தும் என வேலூர் மாவட்டம் முழுவதும் 15 பேரை மீட்டனர்.
இது குறித்து கேட்டபோது போலீசார் கூறியதாவது:-
மீட்கப்பட்ட அனைவரும் வடமாநிலத்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த 2 மாதங்களில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்து அவர்கள் நிரபராதிகள் என்பது தெரியவந்ததால் வடமாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போதும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story