குமரி மாவட்ட கோவில்களில் அன்னதான திட்டம் தொடர்ந்து நடைபெறும் விஜயகுமார் எம்.பி. அறிக்கை


குமரி மாவட்ட கோவில்களில் அன்னதான திட்டம் தொடர்ந்து நடைபெறும் விஜயகுமார் எம்.பி. அறிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2018 4:15 AM IST (Updated: 25 Jun 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட கோவில்களில் அன்னதான திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று விஜயகுமார் எம்.பி. கூறியுள்ளார்.

நாகர்கோவில்,

7-வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 27-ந்தேதி முதல் தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளனர். அப்போது அன்னதானம் போன்றவை நடைபெறாது என்று தமிழ்நாடு திருக்கோவில் முதுநிலை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் அறிவித்து இருந்தார்.

விஜயகுமார் எம்.பி.அறிக்கை

இந்த நிலையில், இதுதொடர்பாக குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக திருக்கோவில்களில் தொடங்கிவைக்கப்பட்ட அன்னதான திட்டம் குமரி மாவட்ட திருக்கோவில்களில் எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

Next Story