கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டர் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உடைந்தது. இதனால் ரூ.30 லட்சத்தில் 12 அடி உயரத்திற்கு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய ஷட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக கடந்த 8-ந் தேதி முதல் 3 நாட்கள் பழைய ஷட்டரை அகற்றும் பணி நடந்தது.
அதைத் தொடர்ந்து 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதற்காக முதல் மதகில் இரு பக்கவாட்டிலும் சீரமைப்பு பணிகள் நடந்தது.
அந்த பகுதிகளில் தகடுகள் பொருத்தப்பட்டு மதகு அமைக்கும் பணிகள் தொடங்கியது. 6½ அடி உயரத்திற்கு மதகு பொருத்தப்பட்டு கியாஸ் வெல்டிங் மூலமாக இணைக்கும் பணி நடந்தது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் போது இன்னும் 15 நாட்களில் ஷட்டர் பொருத்தும் பணிகள் முழுமையடையும் என தெரிவித்தனர்.

Related Tags :
Next Story