தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி பீல்வாடி கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இந்நிலையில் குன்னம் தாலுகா சித்தளி அருகே உள்ள பீல்வாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் மனு கொடுக்க வந்தனர். அப்போது அதில் ஒருவர் பாட்டிலில் கலங்கிய குடிநீரை கையில் வைத்திருந்தார். அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
ஆனால் எங்கள் கிராமத்தில் ஒரு அடிபம்பு தான் உள்ளது. குடிநீருக்காக கிணறுகள் ஏதும் இல்லை. தற்போது அந்த அடிபம்பில் வருகிற தண்ணீரும் கலங்கியபடி தான் வருகிறது. இந்த கலங்கலான தண்ணீரை குடிப்பதால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பீல்வாடி கிராமத்தில் புதிதாக கிணறு வெட்டி தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் பாட்டிலில் கொண்டு வந்த கலங்கிய குடிநீரை காண்பித்தனர்.
குன்னம் தாலுகா கீழப் பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பொதுமக்கள் சார்பாக கொடுத்த மனுவில், கீழப்பெரம்பலூரில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கிறது. இது தொடர்பாக அந்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
வேப்பந்தட்டை தாலுகா எறையூர் காந்தி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் எறையூர் பகுதியில் உள்ள ஒரு புறம்போக்கு நிலத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக விவசாயம் செய்து வருகிறோம். தற்போது சில ஆண்டுகளாக, அந்த இடத்தில் விவசாயம் செய்வதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட் டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) விஜயலட்சுமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story