அரசு போக்குவரத்து ஊழியர்கள் 1,000 பேருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது


அரசு போக்குவரத்து ஊழியர்கள் 1,000 பேருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 26 Jun 2018 5:16 AM IST (Updated: 26 Jun 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

பணிநீக்கம் செய்யப்பட்ட 1,000 அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பஸ் சேவை முடங்கி, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டு இருந்த 1,000 டிரைவர், கண்டக்டர்களும் கலந்துகொண்டு இருந்தனர்.

இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 1,000 ஊழியர்களையும் மாநில அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவு ஊழியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து முறையிட்ட னர். இதையடுத்து இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தலையிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாநில போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பணிநீக்கம் செய்யப்பட்ட 1,000 பேரையும் மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்வதாக கூறியுள்ளது. அவர்கள் அனைவரும் ஜூலை 1-ந் தேதி முதல் பணியில் சேர்ந்து கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல அந்த ஊழியர்கள் ஜூலை 1-ந் தேதி முதல் தான் பணியில் சேர்வதாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

Next Story