கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தீப்பெட்டி தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம் உயர்த்தப்பட்ட கூலி வழங்க கோரிக்கை


கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தீப்பெட்டி தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம் உயர்த்தப்பட்ட கூலி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2018 3:00 AM IST (Updated: 26 Jun 2018 6:30 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தீப்பெட்டி தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தீப்பெட்டி தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலி உயர்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 200–க்கு மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே அவர்கள், கூலி உயர்வு கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து 150 தீப்பெட்டிகளில் மருந்து முக்கிய குச்சிகளை அடைப்பதற்கு கூலி ரூ.5–ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் தீப்பெட்டிகளுக்கு போதிய விலை கிடைக்கப் பெறவில்லை என்று கூறி, பெரும்பாலான தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

காத்திருக்கும் போராட்டம்

இதையடுத்து கோவில்பட்டி, வீரவாஞ்சிநகர், கிழவிபட்டி, செண்பகபேரி, இனாம் மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு நேற்று தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், சி.ஐ.டி.யு. மோகன்தாஸ், கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ்மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் பரமசிவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கூலி உயர்வு வழங்காத தொழிற்சாலைகளின் பட்டியலை பெற்று, அந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை அழைத்து பேசி, தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கவும், கூலி உயர்வு வழங்காத தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மதியம் தீப்பெட்டி தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story