தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிதூத்துக்குடி கடலோர காவல்படை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கலந்து கொண்டு, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணிபேரணியில் கடலோர காவல்படை வீரர்கள், போலீசார், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடி சென்றனர். பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு இருந்து தொடங்கி, காமராஜ் கல்லூரி அருகே முடிவடைந்தது.
பேரணியில் கல்லூரி முதல்வர் நாகராஜன், நாட்டு நலப்பணித்திட்ட உதவி பேராசிரியர் தேவராஜ், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.