கயத்தாறு அருகே பஸ் நிறுத்தத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
கயத்தாறு அருகே பஸ் நிறுத்தத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி,
கயத்தாறு அருகே பஸ் நிறுத்தத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பஸ் நிறுத்தத்தில் பச்சிளம் குழந்தைதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி பஸ் நிறுத்தத்தில் கடந்த 22–ந் தேதி காலையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணியில் பொதிந்து மர்மநபர் போட்டு சென்றார். அந்த குழந்தையை அப்பகுதியினர் மீட்டு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையின் பெற்றோர் யார்? அந்த குழந்தையை பஸ் நிறுத்தத்தில் விட்டு சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த குழந்தையை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை சார்பில், திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
காப்பகத்தில் ஒப்படைப்புஇதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், குழந்தைகள் நல அலுவலர் ஜேம்ஸ் ஆகியோரிடம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேசுவரி, குழந்தைகள் நல டாக்டர் ஜெயந்தி ராணி ஆகியோர் அந்த குழந்தையை ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த குழந்தையை திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.