கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் பட்டை நாமத்துடன், பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் பட்டை நாமத்துடன், பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:30 AM IST (Updated: 27 Jun 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் கிராம உதவியாளர்கள் பட்டை நாமத்துடன் பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 மற்றும் அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தி நெற்றியில் பட்டைநாமம் போட்டு, தட்டு ஏந்தி பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நாத்திகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 மற்றும் அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன், தட்டு ஏந்தி பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story