திருத்துறைப்பூண்டியில் மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு பெண்ணை, விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீஸ் அதிகாரி ஒருவர், தாக்கியதாக கூறப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு பெண்ணை, விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீஸ் அதிகாரி ஒருவர், தாக்கியதாக கூறப்படுகிறது. பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தமிழ்செல்விராஜா, ஒன்றிய செயலாளர் குருமணி, ஒன்றிய துணைச்செயலாளர் சுஜாதா, ஒன்றியக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி உள்பட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story