கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை: 1¼ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் ரூ.75 ஆயிரம் அபராதம்


கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை: 1¼ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் ரூ.75 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:30 AM IST (Updated: 27 Jun 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் உள்ள கடைகளில் 1¼ டன் பாலித்தீன் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.75 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி ஆணையர்(பொறுப்பு) காளிமுத்து உத்தரவின்பேரில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் நகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 1¼ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாலித்தீன் பைகள் விற்றதாக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

Next Story