மீன்கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவு: கடை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
திருப்பூர் பெரியார் காலனியில் 20-க்கும் மேற்பட்ட மீன்கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அவினாசி ரோடு பெரியார்காலனி பகுதி சாலையோரத்தில் 20-க்கும் மேற்பட்ட மீன்கடைகள் செயல்பட்டு வந்தன. அங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் மீன் வாங்க வருபவர்கள் சாலையோரத்திலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் மீன்கடைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், அந்த கடைகளை அகற்ற உத்தரவிடுமாறும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மீன்கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்றுமாலை திடீரென நெடுஞ்சாலைத்துறையின் கோவை கோட்ட பொறியாளர் செல்வக்குமார் தலைமையில் அதிகாரிகள் பெரியார் காலனியில் மீன்கடைகள் இருந்த பகுதிக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். பின்னர் அவர்கள் மீன்கடை உரிமையாளர்களிடம் நீதிமன்ற உத்தரவு இருப்பதால் உடனடியாக கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் முன்னறிவிப்புமின்றி கடைகளை அகற்றுமாறு தெரிவித்தால் நாங்கள் எங்கு செல்வோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது கடை உரிமையாளர்கள் கூறியதாவது, “கடந்த பல ஆண்டுகளாக இதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். உடனடியாக அகற்றினால் 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் பல ஆயிரம் கொடுத்து நாங்கள் விற்பனைக்காக வாங்கி வைத்துள்ள மீன் உள்ளிட்ட உணவு பொருட்களை என்ன செய்வது என்று கூறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவாக இருந்தாலும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றால் நாங்கள் எங்கு செல்வோம். எனவே எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த இடத்தை காலி செய்யும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும்“ என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வருகிற 2-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்தனர். பின்னர் மீன் கடைகளுக்கு பின் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றினார்கள். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவையடுத்து பெரியார் காலனியில் பல ஆண்டுகளாக இருந்த மீன்கடைகளை உடனடியாக அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.
ஆனால் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியதால் அதிர்ச்சியடைந்த சில பெண்கள் நாங்கள் தீக்குளிக்கவும் தயார் என்று ஆவேசமாக கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story