போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்
கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர்,
போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கடலூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் சாலையில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இமாகுலேட் கல்லூரி மாணவிகள், நேரு யுவகேந்திரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஒழிப்போம், ஒழிப்போம் போதை பொருட்கள் பயன்படுத்துவதை ஒழிப்போம், காப்போம், காப்போம் வீட்டையும், நாட்டையும் காப்போம், போதையிலே ஆடாதே, பாதியிலே போகாதே, போதை பழக்கம் உயிரை பறிக்கும் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி அண்ணாபாலம், பாரதிசாலை வழியாக சென்று டவுன்ஹாலை சென்றடைந்தது. இதில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கலால் உதவி ஆணையர் நடராஜன், கோட்ட கலால் அலுவலர் ரம்யா, நகராட்சி ஆணையாளர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நேரு யுவகேந்திரா இளையோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வள்ளி, வனஜா, லதா, மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, செஞ்சிலுவை சங்கம் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜவான்பவன் சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது.
இதே போல் மந்தாரக்குப்பத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். பேரணியை விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக கெங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், மருந்துகள் கட்டுப்பாட்டு துறை ஓய்வுபெற்ற உதவி இயக்குனர் ஜெயராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர் கண்ணப்பன், மருந்துகள் ஆய்வாளர்கள் நாராயணன், சிலம்புஜானகி, ஷைலஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருந்து வணிர்கள் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story