‘கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம்’ சித்தராமையா பேச்சு அடங்கிய வீடியோ வெளியானதால் பரபரப்பு


‘கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம்’ சித்தராமையா பேச்சு அடங்கிய வீடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jun 2018 5:47 AM IST (Updated: 27 Jun 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

‘கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம்‘ என்று சித்தராமையா பேசிய பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் விரிசலை உண்டாக்கி இருக்கிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டணி ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தான் முன்பு தாக்கல் செய்த 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டே போதுமானது என்றும், புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும் கூறினார். தேவைப்பட்டால் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். சித்தராமையாவின் இந்த ஆலோசனையை புறக்கணித்துவிட்ட குமாரசாமி, வருகிற 5-ந் தேதி புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையே சித்தராமையா தர்மஸ்தலா உஜ்ஜிரியில் உள்ள ஆயுர்வேத இயற்கை சிகிச்சை மருத்துவமனையில் புத்துணர்ச்சி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தன்னை சந்தித்த ஆதரவாளர்களுடன் பேசிய வீடியோ வெளியானது. அதில் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தனது அதிருப்தியை வெளி யிட்டார். இதற்கு குமாரசாமி கடும் ஆட்சேபனையை மறைமுகமாக வெளியிட்டார்.

இதனால் சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே மறைமுக மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் சித்தராமையா ஆதரவாளருடன் பேசும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்றும் பேசி இருக்கிறார்.

சித்தராமையாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ கன்னட செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்த ராமையா, குமாரசாமி இடையே உண்டாகியுள்ள மறைமுக மோதல், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இன்னும் என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத் திருந்து பார்க்க வேண்டும். 

Next Story