துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை பெங்களூரு வருகை
கித்வய் புற்றுநோய் மருத்துவமனையில் புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை(வியாழக்கிழமை) பெங்களூரு வருகிறார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் கித்வய் புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கே.பி.லிங்கேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எங்கள் மருத்துவமனை வளாகத்தில் ரூ.120 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரேடியோ தெரபி, ரோபோடிக் அறுவை சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான வசதிகள் அந்த கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி இந்த கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிட திறப்பு விழா 28-ந் தேதி(நாளை) நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இதில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மத்திய மந்திரிகள் அனந்தகுமார், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். ரூ.11 கோடியில் புதிய நவீன சிகிச்சை மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிக செலவாகிறது. இங்கு நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் இந்த சிகிச்சை வசதி கிடைக்கும்.
அதே போல் ‘பெட் ஸ்கேனிங்‘ என்ற நவீன உபகரணத்தையும் வாங்க முடிவு செய்துள்ளோம். எங்கள் மருத்துவமனையில் ஏழை புற்றுநோயாளிகளுக்கு நவீன சிகிச்சை குறைந்த செலவில் வழங்குகிறோம். இதன் காரணமாக ஏழை நோயாளிகளின் வருகை அதிகரித்து உள்ளது. இன்போசிஸ் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த மருத்துவமனைக்கு சில உதவிகளை செய்துள்ளன.
இவ்வாறு லிங்கேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story