மடாதிபதி நிஜகுணநந்தா மன்னிப்பு கேட்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
விவசாயிகள் தற்கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மடாதிபதி நிஜகுணநந்தா மன்னிப்பு கேட்க கோரி மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மண்டியா,
கதக் மாவட்டம் முண்டர்கியில் உள்ள நிஷகலா மண்டபத்தின் மடாதிபதி நிஜகுணநந்தா சாமியார், தேவையில்லாத செலவு, ஆடம்பர செலவு காரணமாக கடன் தொல்லையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மேலும் சூதாட்டத்தில் ஈடுபடுவதாலும் விவசாயிகள் கடனாளி ஆகுகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் மடாதிபதி நிஜகுணநந்தா சாமியாரின் சர்ச்சை பேச்சை கண்டித்தும், அவர் உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க கோரியும், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி உடனே விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று மண்டியாவில் கர்நாடக விவசாய சங்கம் மற்றும் ஹசிரு சேனே ஆகிய விவசாய அமைப்பை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மண்டியா மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ஷம்புனஹள்ளி சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு மடாதிபதி நிஜகுணநந்தா சாமியாரை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் விவசாயிகள், பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கைகோர்த்து நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ஷம்புனஹள்ளி சுரேஷ் பேசுகையில், கர்நாடகத்தில் தான் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி இதுவரை விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை. இந்த நிலையில் நிஜகுணநந்தா சாமியார், விவசாயிகள் ஆடம்பர செலவு செய்வதாலும், சூதாட்டத்தில் ஈடுபடுவதாலும் கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு மண்டியா போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.
இந்த திடீர் போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story