புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும்
புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும் கருத்தரங்கில் வருவாய் அதிகாரி தகவல்.
கரூர்,
கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் சார்பில் மாவட்ட வங்கியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான பொருளாதார கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி பேசுகையில், தற்போது நிலவி வரும் கடுமையான வணிக போட்டிகளால் புதிய தொழில் முனைவோர் அல்லது ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்தவும், மக்களிடம் பிரபலபடுத்தவும் ஏதுவாக புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இயற்கை பொருட்களை நாடிச்செல்லும் பொதுமக்களுக்கு ஏற்ப தங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். நல்ல திட்ட மதிப்பீடு இருந்தும் நிதி தடையால் முடங்கி விடாமல் தடுத்திட ஏஞ்சல் முதலீட்டாளர்கள் அமைப்பின் மூலம் வங்கியுடன் இணைந்து நிதியுதவி அளிக்கப்படுகிறது. அவர்களுடன் இணைந்து புதிதாக தொழில் செய்திட இளைஞர்கள் முன்வர வேண்டும். தொழில் முனைவோராக ஆர்வமுள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தொழிலின் தன்மைக்கேற்ப நிதி உதவி வழங்கப்படும். அரசு உரிமமும் பெற்றுத் தரப்படும் என்றார். கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், நேட்டிவ் லீடு தலைவர் சுசீந்திரன், ஏஞ்சல் முதலீட்டாளர் அமைப்பை சேர்ந்த நல்லமுத்து, பிரிதீவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story