கர்நாடக அரசியலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பரபரப்பு: சித்தராமையாவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு
சித்தராமையாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென சந்தித்து பேசினர். சித்தராமையாவை புறக்கணித்தால் ஆட்சிக்கு நல்லதல்ல என்று எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ளனர். அவர்களை தவிர 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் காங்கிரசை சேர்ந்த 15 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 பேரும் அடங்குவர். பொதுவாக புதிய அரசு அமையும்போது, பழைய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை ரத்து செய்துவிட்டு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கம். எதிர்க்கட்சி ஆட்சியை பிடிக்கும்போது இந்த நிலை உண்டாகும்.
கர்நாடகத்தில் முன்பு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. காங்கிரசுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் துணை பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்யட்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். இதை குமாரசாமி நிராகரித்துவிட்டார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தர்மஸ்தலாவில் உள்ள உஜ்ஜிரி ‘சாந்திவனம்‘ ஆயுர்வேத இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் சித்தராமையா உரையாடியது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. அதில் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சித்தராமையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மற்றொரு வீடியோவில், இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்றும் சொன்னார்.
இதற்கு கடுமையாக பதிலளித்த குமாரசாமி, சித்தராமையாவை மறைமுகமாக சாடி பேசினார். தான் யாருடைய தயவிலும் இந்த பதவியில் இல்லை என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் சித்தராமையா, குமாரசாமி இடையே மோதல் பகிரங்கமாகவே வெடித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள் சிவானந்தபட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் கமடள்ளி, ஸ்ரீமந்தபட்டீல், நாகேந்திரா, நாராயணா, பிரதாப்கவுடா பட்டீல், பசனகவுடா தத்தல் ஆகியோர் தர்மஸ்தலாவுக்கு சென்று சாந்திவனத்தில் உள்ள சித்தராமையாவை நேற்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது அவர்கள் கர்நாடக அரசியல் நிலவரம், கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள், குமாரசாமியின் பேச்சு, பட்ஜெட் தாக்கல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அந்த எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.க்கள், “கர்நாடக கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா உள்ளார். அவர் சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறார். அவர் எங்கள் தலைவர். அந்த அடிப்படையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தோம். இதில் விசேஷம் எதுவும் இல்லை. ஆட்சி நிர்வாகத்தில் சித்தராமையாவை புறக்கணித்தால் இந்த ஆட்சிக்கு நல்லதல்ல“ என்றனர்.
சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் சித்தராமையாவை காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தராமையா சிகிச்சை முடிந்து பெங்களூரு வந்த பிறகு கர்நாடக அரசியல் களம் இன்னும் பல பரபரப்பான மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துவிட்டு சென்ற பிறகு முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா சித்தராமையாவை சந்திக்க சென்றார். ஆனால் அவரை சந்திக்க சித்தராமையா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தாமதமாக வந்ததால், சித்தராமையா கோபம் கொண்டதாகவும், அதனால் சந்திக்க இயலாது என்று கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயச்சந்திரா, “சித்தராமையாவை சந்திக்க வந்தேன். எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா உள்ளார்“ என்றார். அதைத்தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பின்பு சித்தராமையாவை ஜெயச்சந்திரா சந்தித்து பேசிவிட்டு சென்றார்.

Related Tags :
Next Story