அரசு ரப்பர் கழக லாரியை சிறைபிடித்து தொழிலாளர்கள் போராட்டம்
கீழிப்பாறையில் அரசு ரப்பர் கழக லாரியை சிறைபிடித்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
அழகியபாண்டியபுரம்,
குமரி மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒகி புயல் தாக்கியது. இதில் மாவட்டம் முழுவதும் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது கீரிப்பாறை பகுதியில் உள்ள அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ஏராளமான ரப்பர் மரங்களும் முறிந்து விழுந்தன.
அந்த மரத்தடிகளை வெட்டி அகற்றுவதற்காக ரப்பர் கழகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. இதை குலசேகரம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்தார்.
கடந்த 3 தினங்களுக்கு முன் அவர் உள்ளூரில் உள்ள தொழிலாளர்களை அழைக்காமல் வெளியில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து மரத்தடிகளை வெட்டி லாரியில் ஏற்றினார்.
இதை கண்டித்து அப்பகுதி தொழிலாளர்கள் மரத்தடிகளை ஏற்றிச்சென்ற 2 டெம்போக்களை சிறைபிடித்தனர். அதைதொடர்ந்து கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏலம் எடுத்தவர் வரவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஏலம் எடுத்தவர் வராமல், மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது.
இதனால் ஆத்திரமடைந்த சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சந்திரபோஸ், பாரதீய மஸ்தூர் சங்க தோட்ட தொழிலாளர் அமைப்பாளர் ஜெயக்குமார், பா.ஜ.க.சார்பில் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் கீரிப்பாறை பஸ்நிலையம் பகுதியில் திரண்டனர். அப்போது அந்த வழியாக அரசு ரப்பர் கழகத்தில் இருந்து ரப்பர் பால் ஏற்றி வந்த ஒரு லாரியை திடீரென சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த அரசு ரப்பர் கழக கோட்ட மேலாளர் முத்துசாமி, விரிவாக்க அலுவலர்கள் சுகந்தி, உமா மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள், ஏலம் எடுத்தவர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு ஏற்படும் வரை ரப்பர் மரங்களை வெட்டவும், வெட்டிய மரங்களை வெளியே கொண்டு செல்லவும் கூடாது என்று கூறினார்கள். அதிகாரிகள், அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story