திருச்சியில் இருந்து கொச்சி, பெங்களூருக்கு புதிய விமான சேவை
திருச்சியில் இருந்து கொச்சி, பெங்களூருக்கு நேற்று முதல் புதிய விமான சேவை தொடங்கியது.
செம்பட்டு,
திருச்சியிலிருந்து சென்னை மற்றும் மலேசியா, கொழும்பு, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முதல் பெங்களூரு மற்றும் கொச்சிக்கு புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது.
திருச்சியிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் சென்னை சென்று மாறி செல்லும் நிலை இருந்து வந்தது. தற்போது சென்னை செல்லாமல் பெங்களூருக்கு சென்று வேறு விமானத்தில் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த சேவையால் பெங்களூருவில் பணிபுரிந்து வரும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பயன்பெறுவர்.
திருச்சி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோவா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த விமான சேவை இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கு பஸ் மற்றும் ரெயில்களில் சென்று வந்தவர்கள் இனி விமானத்தில் செல்லவும் இதன்மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த விமானம் தினமும் காலை 6.30 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். காலை 8 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 9.05 மணிக்கு பெங்களூரு சென்றடையும். காலை 10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 11.05 மணிக்கு திருச்சியை வந்தடையும். 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12.30 மணிக்கு கொச்சியை சென்றடையும். இந்த தகவலை அந்த விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story