யானை தந்தங்கள் விற்க முயன்ற தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது
பெங்களூருவில் யானை தந்தங்கள் விற்க முயன்றதாக தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
தந்தங்களை விற்பதற்கு உடந்தையாக இருந்த தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரும் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து 12 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் அருகே கெம்பேகவுடா லே-அவுட், ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் யானை தந்தங்களை விற்க சிலர் முயற்சி செய்வதாக மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து அவர்கள் கையில் இருந்த பைகளில் போலீசார் சோதனை செய்தார்கள். அப்போது அவர்களிடம் யானை தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யானை தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் தமிழ்நாடு தர்மபுரியை சேர்ந்த நவீன் என்ற பிரசாந்த் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரகாஷ் என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடியதும், பின்னர் யானை தந்தங்களை வெட்டி பெங்களூருவுக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்றதில் தர்மபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த மேலும் 4 பேர் இவர்களுக்கு, உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.
அதைத்தொடர்ந்து, மகாலட்சுமி லே-அவுட் போலீசார், கிருஷ்ணகிரிக்கு விரைந்து சென்று யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய உடந்தையாக இருந்த 4 பேரை கைது செய்தார்கள். அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி அஞ்செட்டி கிராமத்தை சேர்ந்த காதர் பாட்ஷா, ஜாவீத், தர்மபுரியை சேர்ந்த சபரிநாதன், சதீஸ்குமார் என்று தெரிந்தது. இவர்களில் காதர் பாட்ஷா தி.மு.க. கட்சியின் பிரமுகர் ஆவார். அவர்கள் 4 பேரிடமும் இருந்து 8 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒட்டு மொத்தமாக கைதான 6 பேரிடமும் இருந்து 12 யானை தந்தங்கள் சிக்கியது.
கைதான 6 பேர் மீதும் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக நேற்று முன்தினம் இரவு அஞ்செட்டி கிராமத்தில் வைத்து காதர் பாட்ஷாவை மகாலட்சுமி லே-அவுட் போலீசார் கைது செய்து, அழைத்து செல்வதற்கு தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தமிழக போலீசார் அங்கு விரைந்து வந்து காதர் பாட்ஷாவின் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தியதுடன், அவரை மகாலட்சுமி லே-அவுட் போலீசாருடன் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Tags :
Next Story