நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் மந்திரிகளுடன் பரமேஸ்வர் ஆலோசனை
பெங்களூருவில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் மந்திரிகளுடன் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் சார்பில் மந்திரிகள் கூட்டம் மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் தலைமையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ஆர்.வி.தேஷ்பாண்டே, ஜெயமாலா, கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே, சிவசங்கரரெட்டி, ஜமீர்அகமதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், கட்சியில் சித்தராமையா கருத்தால் எழுந்துள்ள குழப்பம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு பின் பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது தலைமையில் காங்கிரஸ் கட்சி மந்திரிகள் கூட்டம் இன்று (அதாவது நேற்று) நடந்தது. அடுத்த ஆண்டு(2019) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற தேவையான பணிகளை மேற்கொள்வது, வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் கூறிய தகவல்கள் மற்றும் பொறுப்புகளை மந்திரிகளிடம் கூறி இருக்கிறேன்.
நாங்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கிறோம். எங்கள் கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்று மந்திரிகளுக்கு அறிவுறுத்தினேன். சில குழப்பங்கள் குறித்து மந்திரிகள் என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து முதல்-மந்திரியுடன் பேசுவேன். மாவட்ட பொறுப்பு மந்திரிகளை விரைவாக நியமனம் செய்யுமாறு மந்திரிகள் கருத்து தெரிவித்தனர்.
கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட தயார் என்றும் மந்திரிகள் கூறினர். இந்த விஷயங்கள் தவிர வேறு எந்த அம்சம் குறித்தும் நாங்கள் விவாதிக்கவில்லை. மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும்போது மந்திரிகள் அங்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அங்கு கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாட வேண்டும் என்று கூறி இருக்கிறேன்.
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி இடங்கள் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முன்பு வாரிய, கழக தலைவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் வந்துள்ளன. வாரிய, கழக தலைவர்கள் நியமனம் குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Related Tags :
Next Story