வெல்டிங் பணியின் போது மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பலி
நாகர்கோவில் அருகே வெல்டிங் பணியின் போது மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே புத்தளம் கல்லடிவிளையை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர், வெல்டிங் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மினி டெம்போ ஒன்றை வாங்கினார். அந்த டெம்போவிற்கு பாரம் ஏற்றும் பகுதியை அமைக்கும் பணியை சதாசிவத்திடம் ஒப்படைத்தார்.
இந்தநிலையில் நேற்று சதாசிவம் அந்த டெம்போவிற்கு பாரம் ஏற்றும் பகுதியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெல்டிங் செய்வதற்காக எந்திரத்தை எடுத்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அந்த சமயத்தில் வெல்டிங் எந்திரத்தில் இருந்து திடீரென்று அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சதாசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பலியான சதாசிவத்திற்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

Related Tags :
Next Story