அரசு தலைமை வக்கீல் நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீது ஏன் வழக்கு போடவில்லை? தங்கதமிழ்செல்வன் கேள்வி


அரசு தலைமை வக்கீல் நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீது ஏன் வழக்கு போடவில்லை? தங்கதமிழ்செல்வன் கேள்வி
x
தினத்தந்தி 30 Jun 2018 4:15 AM IST (Updated: 30 Jun 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதியை விமர்சித்தது தொடர்பாக அரசு தலைமை வக்கீல் அளித்த நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது குற்றம் சுமத்திய நீதிபதிகள் மீது ஏன் வழக்கு போடவில்லை? என்றும் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

தேனி

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு கூறிய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சித்ததாக அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வனுக்கு தமிழக அரசின் தலைமை வக்கீல் சத்ய நாராயண் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 2 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தங்கதமிழ்செல்வன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

நோட்டீஸ் அனுப்பிய விவரத்தை செய்தித்தாள்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்னும் அந்த நோட்டீஸ் எனது கையில் கிடைக்க வில்லை. நோட்டீஸ் கிடைத்தபிறகு முறையான விளக்கம் கொடுப்பேன்.

அதேநேரத்தில் ஸ்ரீமதி என்ற பெண் வக்கீல் என் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன். நீதிமன்றத்தின் மீது மதிப்பு வைத்து என் மீது பொதுநல வழக்கு தொடர்ந்த அந்த பெண் வக்கீலுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நீதிமன்றம் மீது இவ்வளவு மதிப்பு வைத்து இருக்கும் அந்த பெண் வக்கீல், சாதாரண தொண்டனான தங்கதமிழ்செல்வன் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கிறார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் 4 பேர் பத்திரிகையாளர்களை சந்தித்து குற்றச்சாட்டு கூறினார்கள். அவர்கள் மீது இந்த வக்கீல் ஏன் அவமதிப்பு வழக்கு போடவில்லை?. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்றால் பயம். தங்கதமிழ்செல்வன் என்றால் பயம் இல்லையா?. இதற்கு அந்த பெண் வக்கீல் பதில் கூறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story