சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை: ‘பேஸ்புக்கில்’ பொய்யான தகவலை பரப்பிய ஈரோடு வாலிபர் கைது
சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை குறித்து ‘பேஸ்புக்கில்‘ பொய்யான தகவலை பரப்பிய ஈரோட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பனமரத்துப்பட்டி,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலை அமைய உள்ள இடங்களில் நில அளவீடு செய்யும் பணி கடந்த பல நாட்களுக்கு முன்பு தொடங்கி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிகாரிகள் நில அளவீடு செய்யும் போது பணியை தடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும், ‘பேஸ்புக், வாட்ஸ்-அப்‘ ஆகிய சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொய்யான செய்தி பரவியது. இதுகுறித்து சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், சேலம் மல்லூர் போலீசில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொய்யான செய்தி பரப்பியவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பொய் செய்தி பரப்பியதாக சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 43) என்பவரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
மேலும் இந்த செயலில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்து உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (27) என்பவரை, பொய்யான தகவலை பேஸ்புக்கில் பரப்பியதாக போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Tags :
Next Story