நெல்லை மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது


நெல்லை மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 30 Jun 2018 9:00 PM GMT (Updated: 30 Jun 2018 1:32 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

காசநோய் ஒழிப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் காசநோய் ஓழிப்பு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமின் தொடக்க நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மனகாவலம்பிள்ளை நகர், சிவந்திபட்டி, கிருஷ்ணாபுரம், தச்சநல்லூர், சர்தார்புரம், பழைய பேட்டை, திம்மராஜபுரம், மேலவீரராகவபுரம் ஆகிய ஊர்களிலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பெரும்பத்து, பணகுடி, வள்ளியூர் நரிகுறவர் காலனி, சிதம்பராபுரம், களக்காடு, மஞ்சுவிளை, பாண்டியாபுரம், சீலாத்திகுளம் ஆகிய ஊர்களிலும், 4–ந்தேதி அம்பை இலங்கை தமிழர்கள் முகாம், பிராஞ்சேரி, கோவில்குளம், விக்கிரமசிங்கபுரம், செங்கநல்லூர், கருத்தப்பிள்ளையூர், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, பாப்பாக்குடி ஆகிய ஊர்களிலும்

சிவகிரி

5–ந் தேதி (வியாழக்கிழமை) வீரகேரளம்புதூர் அண்ணா நகர், ராஜகோபாலபேரி, மேலகலங்கல், வெண்ணிலிங்கபுரம், குருவன்கோட்டை, தென்கலம், மேல தாழையூத்து ஆகிய ஊர்களிலும், 6–ந்தேதி சங்கரன்கோவில் காந்திநகர், ராமலிங்கபுரம், பனையூர், புளியங்குடி, சிவகிரி, கீழநீலிதநல்லூர், அழகுநாச்சியார் ஆகிய ஊர்களிலும், 7–ந் தேதி ஆயநேரி, மத்தளம்பாறை, வல்லம், மங்கம்மாள் சாலை, புளியரை, தெற்குமேடு, மேல்கரை, சாம்பவர் வடகரை, வேலாயுதபுரம், சிவராமபேட்டை ஆகிய ஊர்களிலும் காசநோய் கண்டறியும் முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.


Next Story