கார்கால சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை


கார்கால சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 1 July 2018 2:30 AM IST (Updated: 30 Jun 2018 7:28 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கார்கால சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கார்கால சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

விவசாயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம். இங்கு விவசாயம் தடையின்றி நடைபெற மருதூர் அணை மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் ஆகிய 4 கால்வாய்களில் தண்ணீர் திறப்பது மிகவும் அவசியம். இதற்கு பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட விவசாயகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

மருதூர் கீழக்கால், மேலக்கால் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறப்பதன் மூலம் 41 வருவாய் கிராமங்களில் உள்ள 31 பெரிய குளங்களில் தண்ணீர் நிரம்பும். அந்த நீரை பயன்படுத்தி 20 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. அதே போல் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறப்பதன் மூலம் 22 பெரிய குளங்கள் நிரம்பும். இந்த நீரை பயன்படுத்தி 25 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.

கார்கால சாகுபடி

இங்கு காலம் காலமாக நடைபெற்று வந்த கார் கால சாகுபடி கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் நடைபெற வில்லை. இந்த ஆண்டு கார்கால சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து வாழை விவசாயம் பாதுகாத்தல், ஆடு–மாடு வளர்த்தல், குடிநீர் தேவை பூர்த்தி செய்தல் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக கடைமடை வரை தண்ணீர் திறக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story