மேலப்பாளையம் அருகே இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்கு


மேலப்பாளையம் அருகே இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 July 2018 2:15 AM IST (Updated: 30 Jun 2018 8:19 PM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையம் அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை,

மேலப்பாளையம் அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருதரப்பினர் மோதல்

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலகருங்குளம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் பட்டன். இவருடைய மகன் பிரவீன் (வயது 23) லாரி டிரைவர். இவர் தனது லாரியை இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த முருகையா (45) என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தினார். இதனை முருகையா கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லாரியை நிறுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் பிரவீனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. முருகையா, அவருடைய மனைவி செல்வம் (43) ஆகியோரும் தாக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

12 பேர் மீது வழக்கு

இதுதொடர்பாக இருதரப்பினரும் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த பிரவீன், பட்டன், வள்ளியம்மாள், ரெபோக்காள், செந்தில், வில்லியம், மணி, செல்வம், முருகையா, அவருடைய மனைவி செல்வம், மகள் சுமதி, மகன் சுபாஷ் ஆகிய 12 பேர் மீதும் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story