கொடிவேரி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்


கொடிவேரி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கொடிவேரி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்கள்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள சுற்றுலா தலமான கொடிவேரி அணை பகுதியில் பேக்கரி, மளிகை, ஓட்டல்கள் உள்ளன. இங்கு சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள், பொட்டல பொருட்கள் விற்பதாகவும். அதிக விலை சொல்வதாகவும் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோடீஸ்வரன், மனோகரன் மற்றும் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் கொடிவேரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

பேக்கரி, ஓட்டல்கள், மளிகை கடைகளில் உள்ள தின்பண்டங்கள் காலாவதியானதா? பொட்டல பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்பட்டு உள்ளனவா?, ஓட்டல்களில் தூய்மையான தண்ணீர் வழங்கப்படுகிறதா? சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வில் காலாவதியாக தின்பண்டங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தார்கள்.

இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெறும் காலாவதியான பொருட்கள் விற்றாலோ, பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தார்கள்.

Next Story