வாணியம்பாடி அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டை சூறையாடிய 4 பேர் கைது
வாணியம்பாடி அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டை சூறையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டை சூறையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடியை அடுத்த மேல்நிம்மியம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). லாரி டிரைவரான இவருக்கு செக்குமேடு பகுதியில் 75 சென்ட் நிலம் உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செக்குமேட்டை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கருக்கு தனது நிலத்தை ரூ.7 லட்சத்துக்கு விலை பேசினார். முன்பணமாக ரூ.2½ லட்சம் பெற்றுக்கொண்டார். மீதித்தொகையை 3 மாதத்திற்குள் கொடுத்து கிரயம் செய்வதாக அ.தி.மு.க. பிரமுகர் கூறினார். ஆனால் மீதிபணத்தை கொடுத்து அவர் நிலத்தை கிரயம் செய்யாததால் கோவிந்தசாமி தனது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.
இதனையடுத்து ஜெய்சங்கர் முன்பணமாக கொடுத்த ரூ.2½ லட்சத்தை கேட்டு கோவிந்தசாமியை மிரட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கரின் வீட்டை கோவிந்தசாமியின் உறவினர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுகுறித்து ஜெய்சங்கர் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செக்குமேட்டை சேர்ந்த ரவி (56), திருகுமரன் (21), வெங்கடேசன் (29), பெரிய பொன்னேரியை சேர்ந்த ராமு (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story