ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மாற்ற பெற்றோர் எதிர்ப்பு


ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மாற்ற பெற்றோர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 Jun 2018 10:15 PM GMT (Updated: 30 Jun 2018 7:45 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மாற்ற பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு முதல் 5 வகுப்புகள் ஆங்கில வழிக் கல்வியில் நடைபெற்று வருகிறது. இதில் 60–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியை, பள்ளியில் உள்ள ஆங்கில வழிக் கல்வியை தமிழ் வழியாக மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ் வழியில் மாற்றினால் தங்களது பிள்ளைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர் மற்றும் நேச்சுரல் பாய்ஸ் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் லிங்கமுத்து ஆகியோர் கூறியதாவது:–

 பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஆசிரியர்களின் முயற்சியால், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டது. இதில் மாணவர்கள் சிறப்பாக கற்று வருகிறார்கள். தற்போது மாணவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தமிழ் வழியாக மாற்றப் போவதாக கூறுவதை ஏற்க முடியாது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலருக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


Next Story