பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்


பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:00 PM GMT (Updated: 30 Jun 2018 7:49 PM GMT)

பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென கடலுக்குள் குதித்தார். இதைப்பார்த்த நாட்டுப்படகு மீனவர்கள் உடனே விரைந்து சென்று வாலிபரை காப்பாற்றி பாம்பன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ராமேசுவரம்,

பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து நேற்று மாலை வாலிபர் ஒருவர் திடீரென கடலுக்குள் குதித்தார். இதைப்பார்த்த அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாட்டுப்படகு மீனவர்கள் உடனே விரைந்து சென்று வாலிபரை காப்பாற்றி பாம்பன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் பாம்பன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குகனேசுவரன் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராகுல்(வயது 26) என்பது தெரியவந்தது. இவர் காலில் மூட்டு ஆபரேசன் செய்துள்ளதால், அதில் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.


Next Story