அரசு நிதி உதவியின் மூலம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம், கலெக்டர் தகவல்
அரசு நிதி உதவியின் மூலம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான்நிதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்பயணம் இந்த மாதம் (ஜூலை) தொடங்கி டிசம்பர் வரை பல்வேறு குழுக்களாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயண காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தை ஷ்ஷ்ஷ்.தீநீனீதீநீனீஷ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் தபால் மூலம் ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807 அண்ணா சாலை, சென்னை என்ற முகவரிக்கு வருகிற 6–ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.