மாநெல்லூர், சூளமேனி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


மாநெல்லூர், சூளமேனி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:45 PM GMT (Updated: 30 Jun 2018 8:25 PM GMT)

மாநெல்லூர், சூளமேனி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி,

மாநெல்லூர், சூளமேனி ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி, கிராம நிர்வாக அதிகாரி நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை தொடர்பாக 50 மனுக்களும், வீட்டுமனை பட்டா கோரி 31 மனுக்களும், ஸ்மார்ட் கார்டு கோரி ஒரு மனுவும் என மொத்தம் 82 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை தாசில்தார் ராஜகோபால் வழங்கினார். முன்னதாக ஊராட்சி செயலாளர் பாபு வரவேற்றார். முடிவில் மாதர்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி சம்பத்குமார் நன்றி கூறினார்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமாபதி, வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் அன்புசெல்வன் வரவேற்றார். துயர் துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 50 பேர் துயர் துடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்கள் அளித்தனர். இதில் 10 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி தனி தாசில்தார் புனிதவதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 136 மனுக்களை பெற்றுக்கொண்டார். வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரிகள் பிரபு, அனிதா, கூட்டுறவு சங்க தலைவர் தயாளன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 136 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பொன்னேரி தனி தாசில்தார் புனிதவதி பெற்றுக்கொண்டார். இதில், 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 120 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடனடி தீர்வு காணப்பட்ட 16 மனுக்களுக்கு அதற்கான ஆணையை பொன்னேரி தனி தாசில்தார் புனிதவதி பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் காளாஸ்திரி, முரளி ஆகியோர் வரவேற்றனர். முடிவில், கிராம உதவியாளர் கிரிநாதன் நன்றி கூறினார்.

திருவள்ளூரை அடுத்த அயத்தூரில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பரணிதரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சங்கர், வருவாய் ஆய்வாளர் ஜெயதேவி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ரேஷன் கார்டு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவுஸ்பாஷா, தனலட்சுமி, ராதிகா, மணிகண்டன், கல்யாணசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வளையக்கரணை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 36 மனுக்களை பெற்றுக்கொண்டார். துணை தாசில்தார் சின்னப்பா, செரப்பனஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அரி, வளையக்கரணை முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றுத்திறனாளி சான்று, வாரிசு என்று பல்வேறு மனுக்களை தனி தாசில்தார் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் வளையக்கரணை ஊராட்சி மன்ற செயலாளர் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story