குடமுருட்டி ஆற்றின் கரையில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்


குடமுருட்டி ஆற்றின் கரையில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 July 2018 4:15 AM IST (Updated: 1 July 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே குடமுருட்டி ஆற்றின் கரையில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணியை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.

பாபநாசம்,

பாபநாசம் அருகே ராஜகிரி குடமுருட்டி ஆற்றின் இடது கரையில் இருந்த தடுப்பு சுவர் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையில் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதனால் ஆற்று நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருந்தது. இதனை சீர் செய்து தர வேண்டும் என பொதுமக்கள், அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இதனை ஏற்று உடனடியாக குடமுருட்டி ஆற்றின் இடது கரையில் தடுப்பு சுவர் ரூ.40 லட்சம் செலவில் கட்டுவதற்கு முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று தந்தார்.

இதை தொடர்ந்து குடமுருட்டி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். காவிரி வடிநீர் வாரிய பொதுபணித்துறை செயற்பொறியாளர் இக்பால் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், அரசு வக்கீல் அறிவழகன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோபிநாதன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அண்ணாமலை, முன்னாள் பேரூராட்சி தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு குடமுருட்டி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, ஆனந்தன், உதவி பொறியாளர்கள் பார்த்தசாரதி, அன்பானந்தம், தாசில்தார் மாணிக்கராஜ், ஆணையர்கள் நாராயணன்,முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் இளமாறன் நன்றி கூறினார். 

Next Story