நிலங்களை அழித்து 8 வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை திருநாவுக்கரசர் பேட்டி
இயற்கை வளங்கள், நிலங்களை அழித்து 8 வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் கூறினார்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாததால் தான், எதிர்க்கட்சிகள் அரசின் திட்டங்களை எதிர்க்கின்றன என்ற முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
அரசின் திட்டங்களை மக்கள் எதிர்க்கும்போது, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தான் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. வேறு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடினாலும் கூட மக்கள் ஆதரிக்கவில்லை என்றால், போராட்டம் வெற்றிபெறாது. திட்டங்களை எதிர்ப்பது மக்கள் தான். அரசியல் கட்சிகள் கிடையாது. சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லாத ஒன்று. பல்வேறு இயற்கை வளங்களையும், நிலங்களையும் அழித்து 8 வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே அந்த வழித்தடத்தில் சென்னைக்கு செல்வதற்கு 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையை மேம்படுத்தலாம். மேலும் தமிழகத்தில் சாலைகளே இல்லாத கிராமங்கள் உள்ளன. அங்கு மத்திய அரசின் அனுமதியோடு, ரூ.10 ஆயிரம் கோடி நிதியை கொண்டு சாலைகள் அமைக்கலாம். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காவிரி விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டு விட்டது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அரசு மதித்து பின்பற்ற வேண்டும். கர்நாடகா அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவது போல், தமிழக முதல்-அமைச்சரும் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, காவிரி மேலாண்மை ஆணைய பிரதிநிதிகள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நீரை பெறுவதற்கு உரிய வகையில் போராட வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்படுகிறது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அர்த்தம் இல்லாத பேச்சாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story