காதலை ஏற்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என மிரட்டல்: 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயன்ற சம்பவத்திற்கு காரணமான வாலிபரை போலீஸ் தேடுகிறது.
கொள்ளேகால்,
காதலை ஏற்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று வாலிபர் மிரட்டியதால் பயந்துபோன 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
சாம்ராஜ்நகர் தாலுகா அம்மன்புரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பெண் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மைனர் பெண்ணுக்கும், ரோச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனோ(வயது 19) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் மனோ, தனது தோழியான 10-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர், அந்த மாணவியிடம் காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த மாணவி, மனோவின் காதலை ஏற்க மறுத்தார். இருப்பினும் தொடர்ந்து அந்த மாணவிக்கு, மனோ காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் மனோ, அந்த மாணவியை சந்தித்து தனது காதலை தெரிவித்தார். அப்போது அந்த மாணவி, மனோவின் காதலை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோ, எனது காதலை ஏற்காவிட்டால் உன்னையும், உனது பெற்றோரையும் கொலை செய்துவிடுவேன் என்று கூறி அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்தார்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி, வீட்டிற்கு வந்து மிகுந்த சோகத்துடன் இருந்து வந்தார். மேலும் மனோவின் மிரட்டலுக்கு பயந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் அவருடைய உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த மாணவி அலறி துடித்தாள்.
மாணவியின் அலறல் சத்தத்தைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ராமசமுத்திரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக மனோ மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story