மும்பையில் உள்ள விக்டோரியன் கோத்திக் கட்டிடத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்


மும்பையில் உள்ள விக்டோரியன் கோத்திக் கட்டிடத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:00 PM GMT (Updated: 30 Jun 2018 9:46 PM GMT)

மும்பையில் உள்ள விக்டோரியன் கோத்திக் ஆர்ட் டெகா கட்டிடத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மும்பை,

பக்ரைன் நாட்டில் உள்ள மனாமா நகரில் யுனெஸ்கோ உலக பண்பாட்டு கமிட்டி 42-வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மும்பை கோட்டை பகுதியில் மெரின்டிரைவ் கடற்கரையொட்டி கம்பீரமாக காட்சி தரும் விக்டோரியன் கோத்திக் ஆர்ட் டெகா கட்டிடத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யுனெஸ்கோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விக்டோரியன் கோத்திக் ஆர்ட் டெகா கட்டிடம் 19 மற்றும் 20-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதில் தான் ரிகல், எரோஸ் திரையரங்குகள் அமைந்துள்ளன. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், எலிபெண்டா குகைகளுக்கு ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story