மராட்டிய சட்டமன்ற மேலவையில் பா.ஜனதா தனிபெரும் கட்சியாக உருவெடுக்கிறது
மராட்டிய சட்டமன்ற மேலவைக்கு வருகிற 16-ந் தேதி நடைபெறும் தேர்தலை தொடர்ந்து பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டமன்ற மேலவையில் 11 எம்.எல்.சி.க்களின் பதவிக்காலம் வருகிற 27-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த பதவியிடங்களை நிரப்ப வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டு மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடும்போது மேலவையில் பா.ஜனதா கட்சியின் பலம் அதிகரிப்பதோடு, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கவும் உள்ளது.
பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை கணக்கிடுகையில், அந்த கட்சியால் வருகிற 16-ந் தேதி நடைபெறும் தேர்தலில் 5 உறுப்பினர்களை மேலவைக்கு தேர்ந்தெடுக்க முடியும் என கூறப்படு கிறது.
இதேபோல சிவசேனா 3 உறுப்பினர்களையும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு உறுப்பினரையும் தங்களது எம்.எல்.ஏ.க்களை கொண்டு தேர்வு செய்ய முடியும்.
தற்போது 78 உறுப்பினர்களை கொண்ட மேலவையில் பா.ஜனதாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தலா 20 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
காங்கிரசுக்கு 18 உறுப்பினர்களும், சிவசேனாவுக்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.
ஐக்கிய ஜனதாதளம், பி.டபுள்யூ.பி, பி.ஆர்.பி, ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.சி.க்கள் உள்ளனர். 6 சுயேச்சைகள் பதவி வகிக்கிறார்கள்.

Related Tags :
Next Story