காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் அரசு பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
தமிழக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
நாகப்பட்டினம்,
நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் நாகை மாவட்ட பொதுக்குழு மற்றும் வேலை நிறுத்த எழுச்சி நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சுகுமார் வரவேற்றார். மாநில தலைவர் சிவக்குமார் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிறப்பு தலைவரும், இந்திய மாநில மகா சம்மேளன சிறப்பு தலைவருமான கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற 9-ந் தேதி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டம் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்பு தருவது. தமிழக அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
காலமுறை ஊதியம் பெறாத பணியாளர்களை நிரந்தப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணி அமர்வு, பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நேர்மையாக ஒளிவுமறைவற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story