ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்


ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 July 2018 4:00 AM IST (Updated: 2 July 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் நகராட்சியில் ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்புவிழா மற்றும் ரூ.67 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

இந்த விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் தமிழக மின்சாரம்், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குமாரபாளையம் நகராட்சி 1-வது வார்டு காவேரிநகரில் ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுபொருட்களை வழங்கினார். அதை தொடர்ந்து பூசாரிக்காடு, ராஜராஜன் நகர் பகுதி, சந்தைபேட்டை ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வீதி ஆகிய இடங்களில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை்்் திட்டத்தின்கீழ் நகராட்சிக்கு ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட சிறிய டிப்பர் வாகனங்களையும், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 2 பெரிய டிப்பர் வாகனங்களையும்,் பேட்டரியால் இயங்கும் 8 குப்பை அள்ளும் வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களை அமைச்சர் தங்கமணி நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 60 மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து வாங்கும் பிளாஸ்டிக் கலன்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், ஆணையாளர் மகேஸ்வரி, நகர வங்கி தலைவர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச்செயலாளர் எம்.எஸ்.குமணன் உள்பட நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story