மோட்டார் சைக்கிள் மீது லாரிமோதி விபத்து: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் பலி
நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
முத்தூர்,
நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே முள்ளிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வசந்தா.இவர்களின் மகன் ராஜேஷ் (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில் நத்தக்காடையூரில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
காங்கேயம் பிரதான சாலையில் வெள்ளியம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக காங்கேயத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ஒரு லாரி, ராஜேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story