மண்வெட்டியால் அடித்து தொழிலாளி கொலை: மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


மண்வெட்டியால் அடித்து தொழிலாளி கொலை: மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

மண்வெட்டியால் அடித்து தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பெருமாளகரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுடைய மகன் சசிகுமார் (34). கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சசிகுமார் வீட்டை சுற்றி உள்ள மரங்களை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகையன், மரத்தை ஏன் வெட்டுகிறாய்? என சசிகுமாரிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சசிகுமார், மண்வெட்டியை எடுத்து முருகையனின் தலையில் அடித்தார். இதில் முருகையன் சம்பவ இடத்்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

7 ஆண்டு சிறை தண்டனை

இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து மாவட்ட அமர்வு நீதிபதி கலைமதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சசிகுமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். 

Next Story